fbpx

11 மாவட்டத்தில் இன்று ஆர்ப்பரிக்கும் கனமழை…! 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று…!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

இன்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 10,11 ஆகிய தேதிகளில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மகிழ்ச்சி...! தீபாவளி இலவச அரிசி, சர்க்கரைக்கு பதில் பணம்... நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்...!

Wed Nov 8 , 2023
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு பதிலாக இந்த ஆண்டு பணமாக ரூ.490 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் அவர்களது வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் எஸ்.சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிவிப்பில், 3.37 […]

You May Like