fbpx

பயங்கரமான மழை இருக்க போகுது…! 29-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை எச்சரிக்கை…!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

27-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திறும் வீசக்கூடும். 28-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

"தயவு செய்து இந்த மூன்று உணவுகளை காலை உணவு வேளையில் சாப்பிடாதீங்க.!" மருத்துவர்களின் பகீர் எச்சரிக்கை.!

Sat Nov 25 , 2023
காலை உணவு அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. இரவில் தூங்கி எழுந்தவுடன் காலையில் சாப்பிடும் முதல் உணவு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய அவசர வாழ்க்கை சூழ்நிலையில் மக்கள் துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் காலையில் உட்கொள்கின்றனர். இதனால் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதோடு 34 வகையான புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் […]

You May Like