fbpx

தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு…! வானிலை கொடுத்த எச்சரிக்கை…!

30,31 ஆகிய தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. 30.01.2024 மற்றும் 31.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

01.02.2024 02.02.2024 தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ரூ.8,000 ஆய்வு கட்டணம்... நாளை நள்ளிரவு 11.59 வரை‌ விண்ணப்பிக்க வாய்ப்பு...! மிஸ் பண்ணிடாதீங்க

Sun Jan 28 , 2024
2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக நாளை நள்ளிரவு 11.59 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான […]

You May Like