fbpx

இன்று தமிழகத்தில் 27 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை…! எங்கெங்கு தெரியுமா…?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 27 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாமக்கல், சேலம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 22-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

இளைஞர்களே இது தான் சான்ஸ்...! தொழில் முனைவோருக்கு 50% மானியம்...! ஆட்சியர் அறிவிப்பு

Wed Oct 19 , 2022
மத்திய அரசு மீன்வளம்‌ கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்‌ வள அமைச்சகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்‌ வளத்துறையின்‌ மூலமாக செயல்படுத்தப்படும்‌ தேசிய கால்நடை இயக்கத்தின்‌ கீழ்‌ 2021-22ம்‌ ஆண்டு முதல்‌ புதிய திட்டம்‌ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு; தேசிய கால்நடை இயக்கத்தின்‌ வேலைவாய்ப்பு உருவாக்கம்‌, தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன்‌ அதிகரிப்பு மற்றும்‌ இறைச்சி, […]

You May Like