fbpx

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து நாளை, நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை வழக்கம் போல மீன் பிடிக்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த வாகனங்களை உடனே நீக்குங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு..

Sun Nov 27 , 2022
15 ஆண்டுகள் நிறைவடைந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்க மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயம், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை பொது இடத்தில் நிறுத்த தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, 2018 அக்டோபரில், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை இயக்க […]

You May Like