fbpx

#Alert: கனமழை டிசம்பர் 15-ம் தேதி வரை…! வானிலை மையம் மிக முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரில் மிதமான மழை பெய்யக்கூடும் – அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உடல் எடை குறைக்க மஞ்சள் ஒன்றே போதுமா.. இது தெறியாம போச்சே..!

Mon Dec 12 , 2022
உடல் எடை குறைக்க பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் மஞ்சள் டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதனை பற்றி இங்கே காணலாம்.  செய்முறை விளக்கம் : பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது அதனில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளினை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 3 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து […]

You May Like