fbpx

தமிழகமே…! வரும் 30-ம் தேதி வரை கனமழை….! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!

வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலும் வலுவிழக்கக்கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 30-ம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். .

இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இறந்த பிறகு என்ன நடக்கும்..! மரணத்தின் வாசல் வரை சென்றவர்களின் திகிலூட்டும் அனுபவங்கள்..!

Tue Dec 27 , 2022
நாம் இறந்த பின் என்ன நடக்கும் அல்லது இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ எனப்படும் மரணத்திற்கு நெருங்கிய அனுபவம் என்ற சோதனையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. […]

You May Like