fbpx

கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று இந்த 9 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

கிழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 9 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 2,3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

பிணங்களை வாழைப்பழத்துடன் சேர்த்து சூப் வைத்து குடிக்கும் மக்கள்!… ஆன்மா சாந்தியடைய விநோத சடங்கு!… எங்கு தெரியுமா?

Tue Aug 29 , 2023
பிரேசில் பழங்குடியின மக்கள் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி அவர்களது உடலை சூப் வைத்து குடிக்கும் விநோத சடங்கு பின்பற்றி வருகின்றனர். பொதுவாக, ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான சடங்கு, சம்பிரதாயம் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், ஒரு சில சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும் விதமாகவும் உள்ளது. அந்தவகையில், அதாவது பிரேசில், வெனிசுலா போன்ற இடங்களில் வாழும் யனோமாமி (Yanomami) என்ற பழங்குடியின மக்கள் இறந்தவர்களை சூப் வைத்து குடிக்கும் […]

You May Like