fbpx

இன்று 45 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை தந்த வானிலை மையம்…!

குமரி கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் 9,10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு, கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாடுகளுக்கு பரவி வரும் நோய்...! உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்...! இல்லையென்றால் ஆபத்து...!

Sat Jan 7 , 2023
தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாடுகளுக்கு தோல்கழலை நோயின்‌ அம்மைநோய்‌ தாக்கம்‌ பரவலாக ஏற்பட்டு கால்நடைகளுக்கு பெரும்‌ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலமாக மாவட்டத்திலுள்ள 3,50,000 மாடுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும்‌ பொருட்டு 3,86,500 டோஸ்கள்‌ தடுப்பூசி மருந்துகள்‌ பெறப்பட்டு தடுப்பூசிப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்‌ மூலமாகவும்‌,கால்நடை மருந்தகங்கள்‌ மூலமாகவும்‌, இதுவரை 1,63,600 டோஸ்கள்‌ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கு […]

You May Like