இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைப்பு. மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக்கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது. அது கரையைக் கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, அது கடலோரப் பகுதி கரைக்கு இணையாக, சுமார் 150-லிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் நிலை கொள்ளக்கூடும். இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று (27.11.2024) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைப்பு. மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.