fbpx

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 21 பேர் குற்றவாளிகள் … போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ….

வண்ணாரப்போட்டை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி 22 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் ஷகிதா பானு , உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி , தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபஜி , பாஜக பிரமுகர் ராஜேந்திரன் , நாகராஜ், மாரீஸ்வரன் , பொன் ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வெங்கட்ராமன் , ஸ்ரீபெரும்புதூர் , கார்த்திக் , திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் என 22 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பாய்ந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்வு வந்தது. மாரீஸ்வரன் என்ற குற்றவாளி ஏற்கனவே இறந்துவிட்டான். எஞ்சியுள்ள 21 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் 26 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். இதுவரை இவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை எனவே சிறையில் உள்ள 21 பேருக்கும் தண்டனை விவரம் செப்டம்பர் 19ம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Next Post

’சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா’..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Thu Sep 15 , 2022
”ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது” தவறு என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறார். அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவுக்கு அருகதை இல்லை. திட்டங்களுக்கான பெயர் சூட்டு விழா மட்டுமே பிரமாண்டமாக நடக்கிறது. […]
’சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா’..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

You May Like