fbpx

தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகள் பெற தேர்வாகியுள்ள அனைவருக்கும் முதல்வர் பாராட்டு…!

தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகள் பெற தேர்வாகியுள்ள அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள்வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது நலன், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்‌ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு இன்று குடியரசு தலைவர் கையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. விருது பெற உள்ள அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; பத்மா பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்‌ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

English Summary

Chief Minister congratulates all those selected for Padma awards from Tamil Nadu

Vignesh

Next Post

அசத்தும் தமிழக அரசு... பதிவுத்துறை அலுவலகங்களை பார்வையிட்ட மகாராஷ்டிரா குழு...!

Sun Jan 26 , 2025
Government... Maharashtra team visits Registrar's Offices

You May Like