fbpx

மதுரை வெள்ளம்.. இயல்பு நிலை திரும்ப போர் கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது..!! – முதலமைச்சர்

மதுரையில் மழை பாதிப்புகளை சரி செய்து, இயல்பு நிலைக்கு கொண்டு வர போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Read more ; சர்க்கரை நோயாளிகள் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியமா இருக்காதீங்க.. கோமா நிலைக்கு தள்ளலாம்!! தவிர்ப்பது எப்படி?

English Summary

Chief Minister M. K. Stalin has said that works are being carried out on a war-time basis to correct the damage caused by rain in Madurai and bring it back to normal.

Next Post

தீபாவளிக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு அறிவிப்பு..!! - என்னென்ன பொருட்கள் தெரியுமா ?

Sat Oct 26 , 2024
A special collection of groceries for Diwali..!! Good news from the minister

You May Like