fbpx

குட் நியூஸ்..! தீபாவளிக்கு ரேஷனில் இலவச அரிசி…! முதல்வர் அறிவிப்பு…!

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்குள் இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்; கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு கட்டுக்குள்தான் உள்ளது. டெங்கு மட்டுமில்லாமல் இதர காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கொசு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து துறைகளும் தற்போது இணைந்து பணியாற்றுகின்றனர். சுகாதாரத்துறை இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார். மக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு உள்ளது.

புதுச்சேரியின் தேவைகள் குறித்து மத்திய அரசுக்கு நிறைய மனுக்களை தந்துள்ளோம். அதுபோல இப்போது மத்திய உள்துறை செயலரிடமும் மனு அளித்துள்ளோம். புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் விரைவில் இலவச அரிசி தரப்படும். அதற்கான ஒப்புதலை பெற்று நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் இலவச அரிசி தரப்படும். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உள்ளதால் எங்களுக்கு தேவையான நிதியை எப்போதும் மத்திய அரசு தரும். பிரதமரை எப்போது வேண்டுமானாலும் நாங்கள் சந்திப்போம்.

English Summary

Chief Minister Rangasamy said that free rice will be provided by Diwali.

Vignesh

Next Post

எங்கே சமூக நீதி..! அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர்..! தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்..!

Sun Sep 29 , 2024
Where is social justice..! Father is the principal, son is the vice principal..! Tamilisai Soundararajan Kattam..!

You May Like