fbpx

பிரபல விருது வென்ற இரண்டு எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் ‌.

இது குறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கருக்கும், இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவசாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள ராம் தங்கத்துக்கும் தமிழக முதல்வர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

மக்களே...! இன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை...! அரசு சார்பில் இலவசமாக மருத்துவ சிகிச்சை முகாம்...!

Sat Jun 24 , 2023
முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ மு.கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவையெட்டி சேலம்‌ மாவட்டத்தில்‌ இன்று பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெறவுள்ளது. முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும்‌ வகையில்‌ மாவட்டம் தோறும்‌ துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள்‌ நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதன்‌ ஒரு பகுதியாக மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை சார்பில்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ பொதுமக்கள்‌ பயன்‌ […]

You May Like