fbpx

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்…! தமிழகம் முழுவதும் இன்று முதல்….! முதல்வரின் முக்கிய திட்டம்…!

அரசு பள்ளிகளில் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவனங்கள், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதளம் வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்கான இணையதளத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்கிறார்.

இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா..? என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள வசதிகளையும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

டுவிஸ்ட்..‌!வருகின்ற 21-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..‌.! ஓ.பி.எஸ் அணி அடுத்த பிளான் ஆரம்பம்...!

Mon Dec 19 , 2022
வருகின்ற 21-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் 80 சதவீதத்திற்கு மேல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு விரைவில் பொதுக்குழு நடைபெறும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்கக் களத்தில் எடப்பாடி தரப்பை எதிர்ப்பதற்கு பன்னீர்செல்வம் அணியினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இது […]
விரைவில் சந்திப்பு..!! பொறுத்திருந்து பாருங்கள்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

You May Like