fbpx

கடும் பாதிப்பில் தமிழகம்…! இன்று இரவு 10:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்…!

தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடியை இன்று சந்திக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவிகளுக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் தொடர்பான செய்திக் குறிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார்.

தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார். இன்று இரவு 10:30 மணிக்கு பிரதமரை முதலமைச்சர் சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புரட்டி எடுத்த மழை...! இன்று 2 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை...! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!

Tue Dec 19 , 2023
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை. அதிகனமழை, வெள்ளம் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. இன்று ஒரு சில இடங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நெல்லை , தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசு […]

You May Like