fbpx

‘ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகள் திருமணம்..!!’ முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பத்தோடு சென்று நேரில் அழைப்பு!

நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பத்தோடு சென்று நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செம கலர்ஃபுல்லாக ராயல் வெட்டிங் போல நடைபெற்ற அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டானது. பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அணிவித்தார் என்றும் அர்ஜுன் அனைத்தையும் பார்த்து பார்த்து தனது மகளுக்காக செய்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜூன் 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்

நடிகர் அர்ஜுன் மகளுக்கும் குணசித்ர நடிகர் தம்பி ராமைய்யா மகனுக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமண அழைப்பிதழை பிரபலங்களை நேரில் சந்தித்து வழங்க அர்ஜுன் ஆரம்பித்துள்ளார். திருமண ஏற்பாட்டினைத் தடபுடலாகத் தொடங்கி இருக்கிற இந்த இரண்டு குடும்பமும், முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.

போக்குவரத்து துறை Vs போலீஸ் துறை..! உள்துறை & போக்குவரத்து செயலாளர் திடீர் ஆலோசனை!!

Next Post

முடிவுக்கு வந்த போக்குவரத்துத்துறை - காவல்துறை பஞ்சாயத்து..!! கட்டிப்பிடித்து சமாதானம் ஆன போலீஸ் - நடத்துனர்..!!

Sat May 25 , 2024
The conflict between the Transport Department and the Police in Tamil Nadu for the past few days has come to an end.

You May Like