ஒரு மனிதனுக்கு சொத்து இருக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியம் கட்டாயம் இருக்க வேண்டும். பல கோடி சொத்து சேத்து வைத்து விட்டு, அதை அனுபவிக்க முடியாமல் நோயால் அவதிப்படுபவர்கள் அநேகர். அந்த வகையில் உடல் ஆரோக்கியமாக இருக்க, பலர் பல விதமான முயற்சிகளை செய்வது உண்டு. அப்படி நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காலையில் எழுந்ததும் முதல்வர் செய்யும் முதல் வேலை உடற்பயிற்சி தான்.
பின்னர் கட்டாயம் அவர் யோகா செய்வது உண்டு. அதன்பின் குளித்து விட்டு, சைவம், அசைவம் என இரண்டையுமே அவர் சாப்பிடுவது உண்டு. ஆனால் எந்த உணவு சாப்பிட்டாலும் அதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டார். எதையுமே அவர் அளவோடு எடுத்துக் கொள்வார். இது ஒரு பக்கம் இருக்க, அவர் தனது ஆரோக்கியத்தை மேம்படுத்த அற்புதமான பானம் ஒன்றை விரும்பி குடிப்பது உண்டு.
ஆம், நமது முதல்வர் விரும்பி குடிப்பது நெல்லிக்காய் பானம். இந்த பானத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் பார்த்துப் பார்த்து செய்து கொடுக்கிறார். எல்லா நேரங்களிலும் நெல்லிக்காய் ஃபிரஷ்ஷாகக் கிடைக்காத்து என்பதால், அவர் நெல்லிக்காய் ஃபிரஷ்ஷாக் கிடைக்கும் போதே அதை வாங்கி வைத்து விடுவாராம். அதுவும் வாங்கிய நெல்லிக்காயை சுத்தம் செய்து வெந்நீரில் சிறிது உப்பு போட்டு, அதில் நெல்லிக்காயை ஊற போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விடுவாராம்.
மேலும், அதில் புளிப்பு அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதனுடன் ஓரிரு பச்சை மிளகாயும் முழுதாக போட்டு விடுவாராம். பொதுவாக இந்த ஊறவைத்த நெல்லிக்காய் கேரளாவில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் இருக்கும். முதல்வர் ஸ்டாலினுக்கு டீ, காபி மீது அதிக பிரியம் கிடையாது. அவர் டீ குடிப்பது சற்று அரிது தான். இதனால் அவர் சர்க்கரை சேர்க்காத பிளாக் காபி அல்லது க்ரீன் டீ தான் குடிப்பாராம்.
ஆனால் தினமும் அவர் கட்டாயம் குடிப்பது என்றால் அது நெல்லிக்காய் மோர் தானாம். எந்த காலமானாலும் அவர் எப்படியாவது தினமும் ஒரு டம்ளராவது குடித்து விடுவாராம். வெளியே செல்லும் போது கூட, அவர் இந்த பானத்தை எடுத்து செல்வாராம். இதற்கு முதலில், 2 நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதுடன் 4 ஸ்பூன் தயிர், 2 கொத்து கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, கால் ஸ்பூன் சீரகம், 4 மிளகு, சிறிது உப்பு ஆகியவற்றுடன் அரை டம்ளர் தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் அதில் 2-3 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிளண்ட் செய்து, வடிகட்டி எடுத்தால் போதும்.. சுவையான, நெல்லிக்காய் மோர் ரெடி..
நெல்லிக்காய் மோரில் வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், செரிமானம் மேம்படும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேறும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும், கல்லீரல் சார்ந்த பிரச்சினைகள் குணமாகும், ஆஸ்துமா பிரச்சனை குணமாகும், உடல் எடை குறையும்..
Read more: உடல் எடையை சுலபமாக குறைக்கனுமா? அப்போ தினமும் இட்லி, சாம்பார் சாப்பிடுங்க..