fbpx

#திருச்சி: மருத்துவர் இல்லாததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்த பரிதாபம்..!

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் விமலன், இவரது மனைவி ஸ்ரீநிதி (26), கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக, பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த செவிலியர்கள் நீண்ட நேரமாகியும் குழந்தை பற்றி விமலன் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் கூறவில்லை. நேரம் கழித்த பின்பே குழந்தை இறந்ததை பற்றி கூறியுள்ளனர். 

இதனை தொடர்ந்து விமலன் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோரின் உறவினர்கள் 150 பேர் மருத்துவமனை முன்பு திரண்டு வந்து, மருத்துவர் இல்லாததால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த மருத்துவர்கள் உடனடியாக அங்கு வந்தனர். 

குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி இருந்ததால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனை விமலனின் உறவினர்கள் ஏற்காததால் அப்பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் வந்து நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் திருப்தி அடையவில்லை.

இது குறித்து திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பிறகு அவர்கள் சமாதானம் அடைந்தனர். இதற்கிடையே, இறந்த குழந்தையின் உடலை திருச்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Rupa

Next Post

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இறந்த சிறுவன்..! 

Sun Jan 1 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கண்ணம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஹரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 17 வயது இப்பகுதியில் அடிக்கடி திருடுவது வழக்கம். இந்நிலையில், ஹரி மீது இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக, தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர், சிறுவனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நேற்று, நீதிமன்ற […]

You May Like