கோவை அருகே, சிறுமியை மயக்கி இரண்டு நாட்களாக உல்லாசமாக இருந்த கூலி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள்.
அதாவது, கோவை மாவட்டம் அங்களக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆழியாரை சேர்ந்த கூலி தொழிலாளியான, கிருஷ்ணன் (22) என்பவருடன், பழகி வந்தார். கிருஷ்ணன் அவ்வப்போது சிறுமியுடன் செல்போனில் உரையாடி வந்தார்.
இதனால், மாணவிக்கும், அந்த இளைஞருக்கும் இடையில் பழக்கம் அதிகரித்தது. இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். அதன்பிறகு பல்வேறு விஷயங்கள் நடைபெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி, பல்வேறு இடங்களுக்கு, அவர் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு, அவருடைய உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர், அந்த சிறுமியை இரண்டு நாட்களாக, கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில், சிறுமி காணாமல் போனதால், அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள்.
அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சிறுமி கிருஷ்ணனுடன் தான் சென்றார் என்பது தெரிய வந்தது. ஆகவே, கிருஷ்ணன் இருந்த இடத்தை கண்டுபிடித்து, அங்கு சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டனர். அதன் பிறகு கிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு,சிறையிலடைக்கப்பட்டார்.