10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் நடைபெறவுள்ள ஏப்ரஸ் 2023-ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற.இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயண்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.