உத்தர பிரதேசம் மாநிலம் பரேளியில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் பரேளியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் ஒரு மாணவி. அவர் பள்ளி கட்டணம் செலுத்த தாமதமானதால் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக மனமுடைந்த மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாநில காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
இது தொடர்பாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில் அந்த சிறுமியின் தந்தை தான் பள்ளிக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டதாகவும் ஆனால் அதனை பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்திருக்கும் அசோக்குமார் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி பேசிய குழந்தையின் தந்தை அசோக் குமார் எப்போதும் சரியான தேதியில் பணத்தை செலுத்தி விடும் நான் இந்த முறை சிறிது பொருளாதார சிக்கல்கள் காரணமாக என்னால் உரிய நேரத்தில் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும் கால அவகாசம் கேட்டிருந்தேன் ஆனால் அவர்கள் உறுதியாக மறுத்து என் மகளை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் மணமுடைந்த அவள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து தனது வாழ்வை முடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஸ்கூல் ஃபீஸ் கட்டாததன் காரணமாக தேர்வு அனுமதி மறுக்கப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.