fbpx

துப்புரவு அலுவலர் உயிரிழப்பு…! ரூ.10 லட்சம் நிதியுதவி + மகனுக்கு அரசு வேலை…!

சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணி மேற்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள பிற நகராட்சி மற்றும் மாநகராட்சி சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அப்பணிக்காக பணியாளர்கள் இராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தி என்பவர் சென்னைக்கு 05.12.2023 அன்று வரும் போது விக்கிரவாண்டி அருகில் ஏற்பட்ட விபத்தில் காலமனார்.

காலமான பணியாளரின் மனைவிக்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம்) நிதியுதவி வழங்கவும் மற்றும் அவரது வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்கள். மேற்படி அறிவிப்பிற்கிணங்க, இராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தி என்பவரது மகன் கண்ணன் என்பவருக்கு கருணை அடிப்படையில் இராஜபாளையம் நகராட்சியில் பணி ஆய்வாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும், அவரது மனைவி மகேஸ்வரி என்பவருக்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) நிவாரண தொகையினை மின்ன்னு பரிவர்த்தனை மூலம் வங்கிக் கணக்குக்கு 10.01.2024 அன்று அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

Vignesh

Next Post

உலகின் மிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது.! முதல் இடத்தை பிடித்த நாடு எது.?!

Fri Jan 12 , 2024
லன்டனை அடிப்படையாகக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் நிறுவனம் குடியுரிமை மற்றும் குடியிருப்பு குறித்து சர்வதேச அளவில் ஆலோசனை வழங்கி வரும் நிறுவனம் ஆகும். மேலும் டெல்லி பாஸ்போர்ட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன் படி இந்த வருடமும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டுக்கான இந்த […]

You May Like