fbpx

கர்நாடகாவில் பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி…! எடியூரப்பா நம்பிக்கை..!

பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மூத்த தலைவர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்து போட்டியிடவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்தன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதில் பெரும்பாலும் காங்கிரசுக்கு சாதகமாகவே முடிவுகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கருத்துக்கணிப்பு குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பிஎஸ் எடியூரப்பா, பாஜக 115 முதல் 117 இடங்களை கைப்பற்றும், பாஜக ஆட்சி அமைக்கும் என்பதால், ஜேடிஎஸ் உடன் இணையும் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Vignesh

Next Post

செம சான்ஸ்...! RRB,SSC,IAS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! தமிழக அரசு அறிவிப்பு...!

Thu May 11 , 2023
தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ தொடங்கப்பட்ட திறன்‌ மேம்பாட்டிற்கான “நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ கீழ்‌ “போட்டித்‌ தேர்வு” பிரிவானது சமீபத்தில் தொடங்கப்பட்டது. மத்திய அரசுப்‌ போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன்‌ பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக்‌ கொண்டு தொடங்கப்பட்டது. இதன்‌ மூலம்‌ ஒன்றிய அரசின்‌ பணியாளர்‌ தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர்‌ தேர்வுகள்‌ (RRB) வங்கித்‌ தேர்வுகள்‌, இந்திய குடிமைப்‌ பணித்‌ தேர்வுகள்‌ போன்ற பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு […]

You May Like