fbpx

திருநங்கைகளுக்கு முதல்வர் மருத்துவ காப்பீடு…! வரும் 21-ம் தேதி சிறப்பு முகாம்…!

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் துவங்க மானியத் தொகை, கல்வி உதவித் தொகை, சுய உதவி குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை வழங்க தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு திருநங்கை நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நல வாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் துவங்க மானியத் தொகை, கல்வி உதவித் தொகை, சுய உதவி குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் திருநங்கைகள் தொடர்பான சமகால தரவுகளை பெற்றிட மாநில அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்தி தற்போதுள்ள திருநங்கைகளின் எண்ணிக்கை விவரத்தின் அடிப்படையில் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் போதிய இட ஒதுக்கீடு வழங்கிட எதுவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவக்கப்பட்டுள்ளது.

திருநங்கை நலவாரியத்தில் திருநங்கைகளின் பதிவு எண்ணிக்கை அதிகரிக்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு வருகின்ற 21.06.2024 அன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் 4 மாலை மணி வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, முதலைமச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, சுயதொழில் செய்ய கடனுதவி போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English Summary

CM Health Insurance for Transgender

Vignesh

Next Post

15 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து உல்லாசம்..!! 5 மாதம் கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன்..!! இன்ஸ்டா நட்பால் வந்த வினை..!!

Sat Jun 15 , 2024
Police are investigating a 15-year-old boy who raped a 15-year-old girl and made her pregnant in Chennai.

You May Like