fbpx

மிகப்பெரிய துயரம்… வீர மரணம் அடைந்தவருக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும்…! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில்: காஷ்மீரில் நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக்கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கு எனது அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன். வீரமரணம் எய்திய தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கலை, அறிவியல் கல்லூரிகளில் இதை பின்பற்ற வேண்டும்.. அதிரடி உத்தரவு..

Fri Aug 12 , 2022
கலை அறிவியல் கல்லூரிகளில் பி.காம் 2-ம் ஆண்டு சேர்க்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.. அனைத்து கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.. அதில் “ 2021-ம் ஆண்டு உயர்கல்வித்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி 2022-23 முதல் கல்வியாண்டில் நேரடியாக பி.காம், 2-ம் ஆண்டில், வணிகவியல் பயிற்சி பட்டயப்படிப்பு (டிப்ளமோ) மற்றும் வணிகவியல் பயிற்சி […]

You May Like