fbpx

#சற்றுமுன்: கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனின் மகன் உயிரிழப்பு…!

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனின் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனின் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த வாரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். மகனின் உயிரிழப்பு சம்பவம் அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 தேர்தலில் கோவை தெற்கு எம்எல்ஏ-வாக இருந்த அம்மன் அர்ஜுனன், கடந்த முறை அந்தத் தொகுதியை பாஜக கேட்டு வாங்கிக் கொண்டதால், தனக்குச் சம்பந்தே இல்லாத கோவை வடக்கில் போட்டியிட்டார். அங்கும் அவருக்கு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர விசுவாசியான அர்ஜுன் உயிரிழந்த சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

திருப்பதியை போல பழனி முருகன் கோயிலிலும் இதற்கு தடை!… இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!

Sun Sep 3 , 2023
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் கேமரா மற்றும் கேமரா பொருத்திய செல்போன்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல அக்டோபர் 1 முதல் தடை விதிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. மலையடிவாரத்தில் கைப்பேசிகளை பாதுகாக்கும் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கைப்பேசிகளை பாதுகாக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதே நடைமுறை அனைத்து […]

You May Like