மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் வாசு ராஜா (23). இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாசு ராஜா அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
அத்துடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். வாசு ராஜா இதனால் அந்த மாணவி கர்பம் அடைந்துள்ளார். இந்த நிலையில், அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாசு ராஜாவிடம் வலியுறுத்தினார். ஆனாலும் ஏதோ காரணத்தை சொல்லி திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் வாசு ராஜா.
இந்த நிலையில் தான் அவர் தன்னுடைய காதலியை சந்திப்பதையும், அவருடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார். வாசு ராஜா கடைசியாக தான் ஏமாற்றப்பட்டு விட்டது உணர்ந்த கல்லூரி மாணவி சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாசு ராஜாவை கைது செய்துள்ளனர்.