fbpx

மழை தொடர்பான புகார்கள்; உதவி எண்கள் அறிவிப்பு!. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்!.

Helpline number: மழை தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள உதவி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டது.

பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர கால உதவி எண்களையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, வாட்ஸ் அப்- 94458 69848. விழுப்புரம் உதவி எண்கள் அறிவிப்பு: 1077, 04146-223 265, 7200151144 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: பாகிஸ்தான் இல்லாமல் போட்டியை நடத்துவோம்!. இறுதி எச்சரிக்கை விடுத்த ஐசிசி!

English Summary

Complaints related to rain; Helpline Notification!. State Disaster Management Authority!.

Kokila

Next Post

இந்த செயலி யூஸ் பண்றீங்களா..? உங்களை தனியாக அழைத்துச் சென்று இதெல்லாம் பண்ணுவாங்க..!! காவல்துறை எச்சரிக்கை..!!

Sat Nov 30 , 2024
While this app has been banned in many countries, police are warning that crimes are being committed in Tamil Nadu using this app.

You May Like