திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கந்தம்பாளையத்தை சேர்ந்த கவின்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 40 மணியளவில் பயங்கர வெடி சத்தத்துடன் கூடிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையிலிருந்து பொருட்கள் அனைத்தும் சிதறி வெளியே விழுந்துள்ளது. மேலும் கடை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடையில் இருந்த ஃபேன், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விபத்தில் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளது.
டீக்கடையில் ஏற்பட்ட விபத்து என்பதால் சிலிண்டர் விடுத்ததா? என நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் எந்தவித வாயு கசிவு மற்றும் சிலிண்டர் நடிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து டீக்கடையில் மர்ம பொருள் அல்லது பட்டாசு போன்ற வெடிபொருள் ஏதேனும் இருந்ததா?என்பது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், சென்னையில் மணலி மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனத்தில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், சிலிண்டர் வெடித்து அலுவலக அறை முழுவதும் கரும் புகை முட்டமாக காட்சியளித்துள்ளது. இந்த நிலையில், ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவு பணி முடிந்து இரண்டு ஊழியர்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு முன் மெஷின்களை ஆஃப் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென மெஷின் வெடித்து கேஸ் பரவியுள்ளது. இதனால், அறை முழுவதும் தீ பரவியதைத் தொடர்ந்து, திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த வாயு கசிவை ஊழியர்கள் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அலுவலகத்தின் மேற்சுவர் வெடித்து விழுந்துள்ளது. அந்த விபத்தில் ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த விரைந்து வந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் மற்றும் தீயணைப்பு துறையினர், இடிப்பாடுகளுக்குள் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இடிபாடுகளில் சிக்கிய நிறுவன ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது, உயிரிழந்த நபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் எனவும், இவர் இந்த சென்னையில் தங்கி இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more : சுற்றுலா நிகழ்வில் பலூன் வெடிப்பு.. நேபாள துணைப் பிரதமர் போக்ரா மேயருக்கு தீக்காயம்..!!