கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு போக்குவரத்துப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டது. பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.
அனைவருக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்’, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000′, பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்படும்’. ‘யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 3,000 மற்றும் டிப்ளமோ முடித்த நபர்களுக்கு மாதம் ரூ 1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.