தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை விதிகள் 2017க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட Tamilnadu Real Estate Regulatory Authority கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் சந்தையில் நம்பகத்தன்மை ஏற்பட்டு, வீடு வாங்கும் பொதுமக்களில் பலரும் ‘RERA’ ஒப்புதல் பெற்ற திட்டங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை பலரும் அறியாமல் உள்ளனர்.
வீடுவீட்டு மனைத்திட்டங்கள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் 500 சதுர மீட்டருக்கு மேல் அல்லது குடியிருப்புகள் 8 அலகுகளுக்குமேல் இருப்பின் பதிவு செய்வது அவசியம். RERA சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் எழும்பட்சத்தில் ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க இயலாது. வீடு அல்லது மனை வாங்க முடிவு செய்துள்ள நபர்கள் நிறுவனத்தின் பெயர், முகவரி, திட்டம் பற்றிய தகவல்கள், திட்டத்தின் தற்போதைய நிலை, எப்போது முடிவடையும், ‘கார்பெட் ஏரியா’ போன்ற தகவல்களை www.tnrera.in என்ற இணைய தளத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஞானதேசிகன், டிடிசிபி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏவுக்கு எழுதிய கடிதத்தில்; ரியல் எஸ்டேட் சட்டப்படி, கார்பெட் ஏரியா அடிப்படையில் தான் வீடுகள் விற்பனை இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும் போது, வீடுகளின் கார்பெட் ஏரியா விபரங்களை தனியாக வெளியிடுகிறோம். கட்டுமான திட்ட அனுமதி விபரங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் இணைய தளத்தில் வெளியிடும் நிலையில், அதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறோம்.
இதற்கு திட்ட அனுமதி வரைபடம் மற்றும் ஆணையில், ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பிளாக், எத்தனை தளங்கள், எத்தனை வீடுகள் என்பதுடன், வீடுகளின் கார்பெட் ஏரியா என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். அதற்கு ஏற்ப, விதிகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். அத்துடன் தடை இல்லா சான்று விபரங்களையும் இணையதளத்தில் வெளியிட்டால், விபரங்களை அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.