ஈரானில் பெண்கள் விளம்பரங்களில் இடம்பெறுவது தடை செய்யப்படுவதாக கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம் தெரிவித்துள்ளது..
ஈரான் நாட்டில் ஒரு “கவர்ச்சியான” விளம்பரத்தில் ஒரு பெண் ஒரு தளர்வான ஹிஜாப்பில் மேக்னம் ஐஸ்கிரீமை சாப்பிடுவது போல் ஒரு விளம்பரம் வெளியானது.. இந்த விளம்பரத்திற்கு, ஈரானிய மதகுருக்களை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. அவர்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் டோமினோ மீது வழக்குத் தொடர அதிகாரிகளை வலியுறுத்தினார்… இந்த விளம்பரம் “பொது மரியாதைக்கு எதிரானது” என்றும், “பெண்களின் மதிப்புகளை” அவமதிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விளம்பரங்களில் பெண்கள் இடம்பெறக்கூடாது என்று ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.. அந்நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு அந்த அமைச்சகம் எழுதி உள்ள கடிதத்தில், ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளின் படி, பெண்கள் இனி விளம்பரங்களில் இடம்பெற அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே, பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை இஸ்லாமிய குடியரசின் அமலாக்கத்திற்கு எதிராக நாட்டில் பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, பல பெண்கள் பொது மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் ஹிஜாபை அகற்றினர். எனினும் பலர் பொது இடங்களில் ஹிஜாப் இல்லாமல் நடக்கும் பெண்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்..