fbpx

கள்ளத்தொடர்பில் காவலர்.! எரித்துக் கொன்ற காதலி.! பதற வைக்கும் சம்பவம்.!

கள்ளத்தொடர்பு காரணமாக போலீஸ்காரர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண் காவலரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரின் பசாவனகுடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சஞ்சய். திருமணமான இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ராணி என்ற காவலருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து இருக்கிறார். இந்நிலையில் ராணி வேறொரு நபருடன் நெருங்கிப் பழகி வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக சஞ்சய் மற்றும் ராணியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ராணியை சமாதானப்படுத்துவதற்காக சென்ற சஞ்சய் தன்னுடன் சமாதானமாக செல்லவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இருக்கிறார். மேலும் தன் மீது பெட்ரோலையும் ஊற்றி தீ வைத்துக் கொள்ளப் போவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

இந்த சம்பவத்தின் போது ஆத்திரமடைந்த ராணி போலீஸ்காரர் சஞ்சய்யை தீ வைத்து எரித்துள்ளார். அதன் பிறகு தனது தவறை உணர்ந்த அவர் தீயை அணைத்து காயமடைந்த சஞ்சையை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். எனினும் தீக்காயங்களால் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக புகாரை பதிவு செய்த காவல்துறையினர் பெண் காவலர் ராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

கேஜிஎஃப்-ல் பயங்கரம்.!அண்ணனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் கொடூர கொலை.! 2 நண்பர்கள் கைது.!

Fri Dec 22 , 2023
கர்நாடக மாநிலத்தில் அண்ணனுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி. கணவரை இழந்த இவர் சலாபதி என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனை சலாபதியின் தம்பி முரளி கண்டித்து இருக்கிறார். ஆனாலும் சலாபதி மற்றும் தேஜஸ்வினி இருவரும் தங்கள் உறவைத் தொடர்ந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த முரளி தனது […]

You May Like