fbpx

இந்தியாவில் 11,000-ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு.. இந்த 2 மாநிலங்களில் அதிக பாதிப்பு..

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 10,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,47,97,269 ஆக அதிகரித்துள்ளது.. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6,456 பேர் குணமடைந்துள்ளனர்..

கொரோனா காரணமாக 29 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 5,31,064 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.19% ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் நாட்டில் வழங்கப்பட்டுள்ளன. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களில் அதிக பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,527 பேருக்கும், மகாராஷ்டிராவில் 1086 பேருக்கு தொற்று உறுதியானது..

Maha

Next Post

காஞ்சிபுரம் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது…..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…..!

Fri Apr 14 , 2023
கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த பகுதிக்கு மகக்கவசம் அணிந்து கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலன் கண் முன்னே மாணவியை ஒன்றாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6️ பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தை விக்னேஷ் என்கின்ற […]

You May Like