fbpx

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்.. ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட காதலன்..! ஏலகிரி ரெசார்ட்டில் நடந்தது என்ன..?

ஏலகிரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததில்,  காதலன் உயிரிழந்த சம்பவ இடத்திலேயே உயிரிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலகி தனியே வாழ்ந்து வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்கிற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள ரெசார்ட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரிய வரவே காமாட்சியின் அக்கா இவர்களின் உறவு குறித்து கண்டித்துள்ளார். இதனால் காமாட்சி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெயராமன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

இதில் எலி மருந்து குடித்த கள்ளக்காதலன் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து தகவல் அறிந்து சென்ற ஏலகிரி மலை போலீசார் கள்ளக்காதலன் ஜெயராமின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரோடு இருந்த கள்ளக்காதலி காமாட்சியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கள்ளக்காதலன் உயிரிழந்த நிலையில் கள்ளகாதலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏலகிரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த  காதலன் உயிரிழந்த சம்பவ இடத்திலேயே உயிரிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

Read more: குரூப் 1, குரூப் 4 தேர்வு எப்போது..? TNPSC தலைவர் எஸ்.கே.பிரபாகர் முக்கிய தகவல்..!

English Summary

Couple in love commits suicide by consuming poison in Yelagiri

Next Post

இந்தியப் பெண்கள் பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய மாட்டார்கள் என்ற கருத்து தவறானது : கேரள உயர் நீதிமன்றம்..

Mon Mar 17 , 2025
The Kerala High Court has said that the notion that no woman would file a false sexual assault case against someone is wrong.

You May Like