fbpx

காதல் ஜோடியை மிரட்டி பாலியல் சீண்டல்..!! கொள்ளையடித்த பணத்தில் பண்ணை வீடு..!! ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி பின்னணி..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். மேலும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

ஞானசேகரன் மீது பள்ளிக்கரணை, அமைந்தகரை உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து விசாரித்த போது, போலீசுக்கு மற்றொரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பள்ளிக்கரணையில் நடந்த கொள்ளை தொடர்பாக, போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு ஞானசேகரனை தேடி வந்துள்ளனர். இந்நிலையில்தான், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், தனிமையில் இருந்த ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் ஞானசேகரன். இவரது 2 செல்போன்களின் கடந்த 6 மாத கால் ஹிஸ்டரியை காவல்துறையினர் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். சைபர் ஆய்வகத்தில் ஞானசேகரனின் செல்போனைக் கொடுத்து அதில் இருந்து ஆபாச வீடியோக்களை ரெக்கவரி செய்திருக்கின்றனர். வாட்ஸ் அப் சாட்களையும் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

“யார் அந்த சார்?” என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஞானசேகரனின் செல்போனை ஆய்வு செய்தால் அதற்கான விடை தெரியும் என கால் ஹிஸ்டரியை எடுப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், ஞானசேகரன் மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றவர்களுக்கு பகிரப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ஞானசேகரன் கொள்ளையடித்த பணத்தில் பண்ணை வீடு வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : அந்த ’சார்’ யாரென்று ஊருக்கே தெரியும்..!! காவல்துறைக்கு மட்டும் தெரியவில்லையா..? பரபரப்பை கிளப்பிய நிர்மலா பெரியசாமி..!!

English Summary

Police are also investigating the alleged purchase of a farmhouse by Gnanasekaran with the stolen money.

Chella

Next Post

மாணவிக்கு நீதி கேட்டு தடையை மீறி பேரணி..!! நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் அதிரடி கைது..!!

Fri Jan 3 , 2025
Police arrested BJP members, including actress Khushbu, who tried to march in violation of the ban.

You May Like