fbpx

கோவிட் XBB.1.16 மாறுபாடு.. யாருக்கு அதிக ஆபத்து..? அறிகுறிகள் என்னென்ன..?

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 10,000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது..

XBB.1.16 மாறுபாடு என்றால் என்ன? XBB.1.16 என்பது ஓமிக்ரானின் துணை மாறுபாடு ஆகும். இது இரண்டு ஒமிக்ரான் வகைகளின் மறுசீரமைப்பு ஆகும். ஒமிக்ரான் மற்றும் அதன் மாறுபாடுகள் பொதுவாக எளிதில் பரவும் தன்மை கொண்டது.. மேலும் இந்த மாறுபாடு நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

XBB.1.16 கொரோனா மாறுபாடு, உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருவதைக் கண்டறிந்ததை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அதனை, கண்காணிப்பின் கீழ் மாறுபாடு’ என அழைக்கப்படுகிறது. 21 நாடுகளில் மொத்தம் 712 XBB.1.16 மாறுபாடு பரவி உள்ளது..

பெரியவர்களில் XBB.1.16 மாறுபாட்டின், பொதுவான அறிகுறிகள்
காய்ச்சல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், உடல்வலி, வயிற்றுப்போக்கு, சோர்வு, மூச்சுத்திண்றல போன்ற அறிகுறிகள் கோவிட் நோயாளிகளிடம் அதிகம் காணப்படும்.
குழந்தைகளை பொறுத்தவரை, தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், மூக்கில் அடைப்பு ஆகியவற்றுடன் கூடுதலாக, கண்களில் அலர்ஜி, கண்களில் அரிப்பு, ஆகியவை ஏற்படுகிறது..

XBB.1.16: யார் அதிக ஆபத்தில் உள்ளனர்? கொரோனா என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு சுவாச நோயாகும். வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்..
  • நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும்
  • சானிடைசரை கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
  • நல்ல கை சுகாதாரத்தை பராமரிக்கவும்
  • தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

புதிய வகை காரணமாக நிமோனியா, சுவை மற்றும் வாசனை இழப்பு போன்ற தீவிர அறிகுறிகள் இதுவரை காணப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடுமையான நோய்க்கான ஆபத்து காரணிகள் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் இதுபோன்ற பாதிப்பு அரிதானவை. கொரோனாவின் தீவிரத்தை குறைப்பதில் பூஸ்டர் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் இந்த புதிய வகைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அத்தகைய நபர்களையும் பாதிக்கலாம். இதற்கு, அனைத்து மக்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Maha

Next Post

தமிழ் சினிமாவில் சரிகிறதா நயன்தாராவின் மார்க்கெட்…..? காரணம் என்ன…..!

Sat Apr 15 , 2023
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இவர் உள்ளார். இத்தகைய நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் என்பவர் நடிகை நயன்தாராவின் மார்க்கெட் சரிவதற்கான காரணம் தொடர்பாக ஒரு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் படம் தொடர்பான அறிவிப்புகள் பெரிதாக வெளியாவது இல்லை என்று கூறியுள்ளார். […]

You May Like