சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் அவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகள் மற்றும் தெரு நாய்கள் தாக்கி பொதுமக்கள் படுகாயம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் சாலையில் சுற்றி திரியும் மாடு ஒன்று குழந்தையுடன் சென்ற தாயை கொடூரமாக முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த தாய் மகள் மீது அதே சாலையில் கன்று குட்டியுடன் வந்து கொண்டிருந்த பசுமாடு திடீரென்று ஆக்ரோஷமாக சிறுமியை முட்ட முயன்றது. அதை தடுக்க முயன்ற தாய் மீது கோபத்தை வெளிப்படுத்தி முட்டி தூக்கி வீசக்கூடிய காட்சி பதப்பதைக்க வைக்கிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மாடை விரட்ட முயன்றனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் வரவலைக்கப்பட்டு காயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் பசுமாட்டை பிடித்து வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையுடன் சென்ற தாயை மாடு முட்டும் பதைபதைக்கும் காட்சி.. #chennai #cowattack #rajnewstamil pic.twitter.com/pCFWsJS5IS
— Raj News Tamil (@rajnewstamil) March 15, 2025
Read more: ’அவியல் கூட்டுப் போல் வேளாண் பட்ஜெட்’..!! ‘விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மையில் கூட ஊழல் செய்யும் திமுக’..!! எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு..!!