கற்றாழை : கற்றாழையின் ஜெல் பொதுவாக மருத்துவப் பலன்களைக் கொண்டவை. உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது. கற்றாழை உதடு வெடிப்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. கற்றாழையின் ஜெல்லை எடுத்து உதடுகளில் தடவலாம். இதனால் இறந்த சருமம் நீங்கி உதடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.
தேன் : உதடுகளுக்கு தேன் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மிருதுவாக்கும். தினமும் இரவில் தூங்கும்போது உதடுகளில் தேன் தடவி தூங்கிவிட்டு, காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தேன் உங்கள் உதடுகளை ஒரே இரவில் குணப்படுத்தும்.
நெய் அல்லது வெண்ணெய் : நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது சரும செல்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. உதடுகளில் நெய் தடவினால், சருமம் ஈரப்பதமாகி, உதடுகள் வெடிப்பது நின்றுவிடும். உதடுகளில் நெய்யை உதடு தைலம் போல பயன்படுத்தலாம். அல்லது வெண்ணெயை தடவி வருவதன் மூலமும் இதே பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் : பொதுவாக தேங்காய் எண்ணெயை குளிர்காலத்தின் போது நாம் கை கால்களில் தடவிக்கொள்வது வழக்கம். தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. அதை விரலில் எடுத்து உதடுகளில் தடவவும். இதனால் உதடுகளின் வறட்சி நீங்கும். உதடுகள் வெடிப்பது நின்றுவிடும், மேலும் அவை மென்மையாக மாறும்.
தண்ணீர் குடிப்பது : குளிர்காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, சருமம் வறண்டு, உதடுகள் வெடிக்க ஆரம்பிக்கும். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும், இதன் காரணமாக வறட்சி பிரச்சனை நீங்கும். உதடுகளை மென்மையாக பாதுகாக்க முடியும்.