fbpx

Crime | ”அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையா இருக்கே”..!! இந்த கொடுமையை நீங்களே பாருங்க..!!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் பவித்ரா (24). இவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பவித்ராவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும், தனது காதலனுடன் தொடர்ந்து பேசி வந்த பவித்ரா, ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.

இதையடுத்து, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த உறவினர் மகன் புருஷோத்தன் என்பவருக்கும் பவித்ராவிற்கும் கடந்த 2016இல் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தை முறையாக பதிவும் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன் தனது காதலிக்கு தமிழ்வாணன் போன் செய்து பேசியுள்ளார். இதனால் மனம் மாறிய பவித்ரா, மீண்டும் தமிழ்வாணனுடன் பழகி வந்த நிலையில், இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மனைவி பவித்ராவுக்கு தமிழ்வாணனுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த கணவர் புருஷோத்தமன், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தமிழ்வாணனுடன் இனி எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள மாட்டேன் என்று காவல் நிலையத்தில் பவித்ரா எழுதி கொடுத்துள்ளார்.

மறுநாள் புருஷோத்தமன் தனது மனைவி பவித்ராவை காணவில்லை என்று மீண்டும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, பவித்ராவை அழைத்து விசாரித்தபோது, ”நான் கணவர் புருஷோத்தமனனுடனும் போகமாட்டேன்… கள்ளக்காதலன் தமிழ்வாணனுடனும் போகமாட்டேன்… நான் என்னுடைய குழந்தையை பார்த்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு தனது கள்ளக்காதலனுடனே சென்றுவிட்டார் பவித்ரா. தனது 5 வயது மகளையும் தன்னுடனே அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பவித்ரா தனது மகளை வீட்டுக்கு வெளியே விளையாடுவதற்காக விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், சிறுமி விளையாடி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் அழுது கொண்டே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பவித்ராவின் தந்தை கோவிந்தராஜ், தனது மகள் பவித்ரா சாவில் சந்தேகம் இருக்கிறது. எனது மகளை தமிழ்வாணன் சமீபத்தில் கொடுமைப்படுத்தி உங்கள் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் பணம் வாங்கி வா என்று அடித்து உதைத்துள்ளார்.

எனவே, தனது மகளுடன் பழகி வந்த தமிழ்வாணனை போலீசார் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

100 நாள் வேலை திட்டம்..!! ஆகஸ்ட் 31ஆம் தேதியே கடைசி..!! மறந்துறாதீங்க..!! சம்பளம் கிடைக்காது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Sun Aug 27 , 2023
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கிறது. இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும். 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் […]

You May Like