fbpx

பட்டியலின தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ பற்ற வைத்து எரிக்க முயன்ற கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் தனியாக வீட்டிலிருந்த பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நெருப்பு வைத்து எரித்த சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மா மாவட்டத்தைச் சார்ந்த 40 வயது தலித் பெண் ஒருவரை அப்பகுதியைச் சார்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது உடலில் தீ வைத்து காயப்படுத்தி இருக்கிறார். இறந்த பெண் நாப்பது சதவீதம் தீக்காய்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த தினத்தன்று தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார் அந்த பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண். அப்போது இவரது வீட்டிற்குள் புகுந்த ஷாகூர் என்ற நபர் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததோடு அவர் மீது ஒரு வித ரசாயனத்தை ஊற்றி தீப்பற்ற வைத்திருக்கிறார். இச்சம்பவத்தில் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் ஷாகூர் கைது செய்யப்பட்டு தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

Rupa

Next Post

தமிழகத்திற்குள் முதல் வந்தே பாரத் சேவை தொடக்கம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயிலின் சிறப்பம்சங்கள் இதோ..

Sat Apr 8 , 2023
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. பின்னர் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை […]

You May Like