மரண வாக்கு மூலங்களை பதிவு செய்யும்போது மாவட்ட நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவர் திருமணத்தை மீறி வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனை ரமேஷின் மனைவி ஜோதி தட்டி கேட்டதன் காரணாமாக, மனைவியை தீ வைத்து கொள்ள முயன்றுள்ளார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிக்கு 95 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் காப்பாற்றுவது கடினம் என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஜோதியிடம் மரண வாக்குமூலம் பதிவுசெய்யும் வேளையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து மாவட்ட நீதிபதி ஒருவர் முன்னிலையில் மரண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதில் தன்னை தீ வைத்து எரித்தது கணவர் ரமேஷ் தான் என்று, நடந்த அனைத்தையும் கூறியுள்ளார் ஜோதி. இதனையடுத்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் ரமேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்தது, இதனை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது.
இந்நிலையில் ஆயுள் தண்டனை வழங்கிய உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மரண வாக்குமூலம் அளித்த ஜோதிக்கு 95 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது, மேலும் அவருக்கு வாய் பகுதியில் பேச முடியாத அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது, இப்படி இருக்க எப்படி அவர் தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருக்க முடியும் என்று சந்தேகத்தை முன்வைத்தார். மேலும் 95 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கும் ஒருவர் மயக்கநிலையில் மட்டுமே இருக்க முடியும் அவர் எப்படி கைநாட்டு வைத்திருக்க முடியும் போன்ற வாதங்கள் ரமேஷ் தரப்பில் முன்வைக்கப்போட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வாக்குமூலத்தை பதிவு செய்தது மாவட்ட நீதிபதியாக இருப்பதால், அவர்களுடைய செயல்பாடுகளை மரண வாக்குமூலம் பதிவு செய்யும்போது சந்தேகிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். மேலும் இதனைத்தொடர்ந்து ரமேஷ் அவர்களின் மனுவையும் தள்ளுபடி செய்தனர். மரண வாக்குமூலம் தொடர்பான நீதிபதிகளின் இந்த கருத்து வரும் காலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.