fbpx

ரூ.7,800 கோடி மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்…!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமக் கூட்டத்தில், சுமார் ரூ.7,800 கோடி மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாட கொள்முதல் பரிந்துரைகளுக்கு ஒப்புதலை வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, எம்ஐ -17 வி 5 ஹெலிகாப்டர்களில் ஈடபிள்யூ சூட் வாங்குவதற்கும், நிறுவுவதற்கும் அனுமதி அளித்துள்ளது.

இ.டபிள்யூ சூட் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும்.ஆளில்லா கண்காணிப்பு, வெடிமருந்துகள், எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள் வழங்குதல் மற்றும் போர்க்களத்தில் உயிரிழந்தவர்களை மீட்டல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு உதவும் தரையில் செயல்படும் தானியங்கி அமைப்பு முறையை கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

7.62×51 மிமீ இலகுரக இயந்திர துப்பாக்கி (எல்.எம்.ஜி) மற்றும் பிரிட்ஜ் லேயிங் டேங்க் (பி.எல்.டி) ஆகியவற்றை வாங்குவதற்கான பரிந்துரைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. புராஜெக்ட் சக்தி திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல்கள் அனைத்தும் உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பெறப்படும்.

Vignesh

Next Post

ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.1.07 கோடி நிதி ஒதுக்கீடு..!! எதற்காக தெரியுமா..? அரசாணை வெளியீடு..!!

Fri Aug 25 , 2023
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலனடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சிறப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, ரூ.1,000 […]

You May Like