fbpx

அளவுக்கு அதிகமாக டீ குடிப்பவரா நீங்கள்.? உங்களுக்கு இந்த தோல் நோய் பாதிப்புகள் ஏற்படலாம்.!

நம் நாட்டை பொறுத்தவரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் டீ குடித்து வருகிறோம். ஆனால் சில பேர் அதிகமான டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். ஒரு டென்ஷன் மற்றும் ஸ்ட்ரெஸ் எனக்கூறி ஒரு நாளைக்கு பத்து முதல் 12 டீ குடிப்பார்கள். அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் நமது சருமம் மற்றும் முக அழகு எவ்வாறு பாதிக்கிறது என பார்ப்போம்.

டீ யை அதிகமாக குடிக்கும் போது அதில் இருக்கும் காஃபின் நமக்கு தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தூக்கம் இல்லாமல் முகம் எப்போதும் சோர்வுடன் ஓட்டுநர்வு இழந்து காணப்படும். தேநீர் அதிகமாக குடிக்கும் போது அதில் இருக்கக்கூடிய காஃபின் டையூரிடிக்காக நம் உடலில் இருந்து அதிக அளவு நீரை வெளியேற்றுகிறது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும். இந்த நீரிழப்பினால் சருமங்கள் வறண்டு போவதோடு சுருக்கங்களும் விழும்.

டீ அதிகமாக குடிப்பவர்களுக்கு ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்படும். இதனால் எண்ணெய் அதிகமாக உற்பத்தியாகி உங்கள் சருமங்களில் இருக்கும் துகள்களை அடைத்து விடுகிறது. இதன் காரணமாக முகப்பருக்கள் ஏற்படுகின்றன. டீ அதிகமாக குடிப்பதால் அது நம் உடலில் சென்று கொலாஜன் செயலிழப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுவதோடு தோள்களில் சுருக்கமும் ஏற்படுகிறது.

டீயை சூடாக அதிக முறை குடிக்கும் போது அது நாள்பட்ட தோல் நோயான ரோசாசியா ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கு மற்றும் கன்னத்தில் சிவப்பாக இருக்கும். மேலும் இது சில நேரங்களில் அரிப்பையும் ஏற்படுத்தும்.

Kathir

Next Post

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம்...! 27 மாவட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

Thu Nov 16 , 2023
விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 22.11.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி […]

You May Like