தற்போது தமிழக அரசின் சார்பாக ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதை நன்றாக படித்து, அதில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Material child health officer காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை தற்போது புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், முது அறிவியல் அல்லது இளம் அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. விருப்பமான நபர்கள் இதன் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பம் செய்து பயனடையலாம்.
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், அல்லது கல்வி நிறுவனத்தில் முது அறிவியல் அல்லது இளம் அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள்தான் இந்த பணிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். இது தொடர்பான வயதுவரம்பு குறித்த விவரங்களுக்கு, இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் தகுதியான நபர்களுக்கு, மாதம் வந்திருக்கு 19 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதன் பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நாளை மாலைக்குள் அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.