முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியின் நோக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில், முப்பெரும் விழா மிக பிரமாண்டமாக நடைபெறது. இந்த விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற திராவிட கோட்பாட்டின்படி ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், முதியோர், பெண்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் என்று யாருக்கு எந்தத் திட்டம் தேவை என்பதை எளிதாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியின் ஒரு பிரிவில் ‘உங்கள் திட்டங்கள்’ என்ற பொத்தான் இருக்கும். பொது மக்கள் பதிவு செய்யும் சுயவிவரத்தைப் பொறுத்து, எது பொருந்துமோ அந்த திட்டங்கள் சார்ந்த தகவல் தன்னிச்சையாக இச்செயலியில் வரும்.
திமுக மக்களுக்கு என்ன செய்தது என்றும், தமிழகத்திற்கு என்ன செய்தது என்றும் ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் முழுதாக தெரிந்து கொள்ளலாம். மேலும், 234 தொகுதிகளைப் பற்றிய அரசின் திட்டங்கள் சார்ந்த முழு தகவல்கள் இருக்கும். இந்த செயலியில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் பற்றியும், முதலமைச்சரின் களச் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முதல் கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் பொதுமக்களே கேள்விகளைக் கேட்கலாம்.