ராஜா ராணி தொடரின் 2வது பாகம் தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் முதலில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வந்தார் பிறகு அவருக்கு பதிலாக ரியா என்பவர் கதாநாயகியாக மாற்றப்பட்டார்.
ஆனால் ஆலியா மானசாவிற்கு ரசிகர்களிடையே கிடைத்த அதே வரவேற்பு நடிகை ரியாவிற்கு கிடைப்பதற்கு முன்பாகவே அவர் இந்த தொடரில் இருந்து திடீரென்று வெளியேறி விட்டார். இதுவே ராஜா, ராணி தொடரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை வழங்கியது.
இந்த நிலையில், இந்த தொடரின் இயக்குனரான பிரவீன் கூட இந்த சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அந்த தொடரின் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.மேலும் அவரக்க பதிலாக இனி அந்த தொடரை புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி என்பவர் நான் இயக்கப் போகிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.