fbpx

“ இயக்குனர் ராஜமௌலி என்னை அவமானப்படுத்தினார்…” பழம்பெரும் நடிகை காஞ்சனா வேதனை..

1960களில் இருந்து தென்னிந்திய திரையுலகில் உச்சத்தில் இருந்த பழம்பெரும் நடிகை காஞ்சனா, பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பற்றி சில கருத்துகளை கூறி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சனா, தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து யூடியூப் சேனல்களில் விரிவாக பேசினார். தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையின் பல குறிப்பிடத்தக்க காலங்களை நினைவு கூர்ந்தார். மேலும் தன்னை அவமானப்படுத்திய ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த காஞ்சனா, பல ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்திற்காக தன்னை பாகுபலி தயாரிப்பாளர்கள் அணுகியதாக கூறினார்.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை மறைமுகமாக குறிப்பிட்ட காஞ்சனா, “பாகுபலி படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டீர்கள். நான் கேட்டதை கொடுக்க தயங்கினீர்கள். அது உங்களுக்கு பெரிய தொகை இல்லை. என்னை போன்ற கலைஞர்களுக்கு கொடுத்தால் எங்களால் நடிக்க முடியும். 84 வயதிலும், நான் நன்றாக இருக்கிறேன். இரண்டு நாள் படப்பிடிப்பிற்கு நான் ரூ.5 லட்சம் கேட்டேன், ஆனால் அது பெரிய தொகை என்று சொன்னார்கள்.. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.. நான் யாரையும் விமர்சிக்கவில்லை. கலைஞர்களின் துன்பத்தை சொல்கிறேன்.தயவுசெய்து யோசியுங்கள் நம்மால் இயன்றதைச் செய்ய முடியும். இன்னும் பல மூத்த கலைஞர்கள் நடிக்கும் நிலையில் உள்ளனர்..” என்று தெரிவித்தார்..

வசுந்தரா தேவி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.. 1988க்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய காஞ்சனா, 2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவின் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி….! தொடரை வெல்லுமா இந்திய அணி…..?

Wed Mar 22 , 2023
இந்தியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது இதன் காரணமாக தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. இத்தனை சூழ்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் […]

You May Like